பிரக்ஞானந்தாவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது... பாராசின் ஓபன் செஸ் தொடரையும் வென்றார்!

பிரக்ஞானந்தாவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது... பாராசின் ஓபன் செஸ் தொடரையும் வென்றார்!

செர்பியாவில் நடைபெற்ற பாராசின் ஓபன் 'ஏ' செஸ் போட்டி தொடரை வென்று இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாதனைப் படைத்துள்ளார்

பாராசின் ஓபன் 'ஏ' செஸ் போட்டியில் நடந்த ஒன்பது சுற்றுகளில் எட்டு புள்ளிகளைப் பெற்று பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 7.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த முதல் நிலை வீரரான அலெக்சாண்டர் ப்ரெட்கேவை விட அரை புள்ளி முன்னேறி இந்த தொடரை அவர் கைப்பற்றினார்.

இந்த தொடரில் பிரக்னாநந்தா 7 சுற்றுகளில் வெற்றிபெற்றார். மேலும், ஏழாவது சுற்றை ப்ரெட்கேயுடனும், இறுதிச் சுற்றில் கஜகஸ்தானின் அலிஷர் சுலேமெனோவுடனும் டிரா செய்ததன் மூலமாக எட்டு புள்ளிகளுடன் தொடரைக் கைப்பற்றினார்.

தொடர் வெற்றிகளை குவித்து வரும் 16 வயது இளம் வீரரான பிரக்ஞானந்தா , வரும் 28-ம் தேதி சென்னையில் தொடங்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ‘பி’அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டியில் இவர் பல சாதனைகளைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in