`சென்னையில் கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை'- தொடங்கி வைத்த சின்மயி; சமூக வலைதளங்களில் குவியும் புகார்

பின்னணி பாடகி சின்மயி
பின்னணி பாடகி சின்மயிசென்னையில் அதிகரிக்கும் கொசுத் தொல்லை, சமூக வலைதளங்களில் குவியும் புகார்கள்

சென்னையில் கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னணி பாடகி சின்மயி உட்பட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் உள்ள வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கதவைத் திறந்து வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பின்னணி பாடகி சின்மாயி தொடங்கி பலரும் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். கொசுத்தொல்லை தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பின்னணி பாடகி சின்மயி, ’’சென்னையில் கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை, மிகவும் மோசமாக உள்ளது. கைக்குழந்தை வைத்திருப்பதால் கொசு மருந்து உள்ளிட்டவை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது’’ பதிவிட்டுள்ளார்.

சிலர் நேரடியாக சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவிக்கின்றனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அவ்வப்போது பதிலளித்து வந்தாலும் கொசுக்களின் தொல்லை தீர்ந்தப்பாடு இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.

இதுத்தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியப்போது, ‘’சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது உண்மைத்தான். தற்போதுத்தான் மழைக்காலம் முடிவடைந்துக் கோடைக்காலம் தொடங்கவுள்ளது. படிப்படியாக கொசுத் தொல்லைக் குறையும்.

ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல்
ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல்சென்னையில் அதிகரிக்கும் கொசுத் தொல்லை, சமூக வலைதளங்களில் குவியும் புகார்கள்

அதே நேரத்தில் கொசுக்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு ட்ரோன் மூலமாக மருந்துகளை தெளித்து வருகிறோம். குடியிருப்புப் பகுதிகளில் கொசு தெளிப்பான் மூலம் மருந்து அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக வரும் புகார்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என தெரிவித்தனர்.

அதே நேரத்தில் கொசுக்களால் டெங்கு, மலோரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் சென்னை மாநகராட்சி மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in