அதிகரிக்கும் வெயில்; இளநீர், மோர், பழச்சாறுகளை அருந்துங்கள்: அமைச்சர் அறிவுரை

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்அதிகரிக்கும் வெயில்; இளநீர், மோர், பழச்சாறுகளை அருந்துங்கள்: அமைச்சர் அறிவுரை

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இளநீர், மோர், பழச்சாறுகளை அருந்துங்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று முதல் (மே 15) வருகிற 18-ம் தேதி வரை இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என்பதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 18-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதிக வெப்பநிலை இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக சிலருக்கு அசௌகரியம் ஏற்படலாம்.

அதிகளவு வெப்பம் தாங்க முடியாத நிலை உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு மயக்கம் உள்பட பல்வேறு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பகல் நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், அதிகரிக்கும் வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், " உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை அருந்த வேண்டும். கோடைகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in