
மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது.
சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கிய கரோனா தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் விருதுநகரைச் சேர்ந்த தாய், மகள் உள்பட 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. அம்மாநிலம் முழுவதும் அம்மை தொற்றால் ஆயிரத்து 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் மட்டும் அம்மை தொற்றால் 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மை பாதிப்பால் 20 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நோயால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், தும்மல், இருமல் மூலம் அம்மை பரவுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.