அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி இன்று முதல் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்KUMAR SS

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், அவர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்கள் என 16 லட்சம் பேர் உள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதால் ஆண்டுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவீனம் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, 38 சதவீதமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு கரோனா காலம் என்பதால் குறைந்த அளவிலேயே அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதனால் அகவிலைப்படியை கூடுதலாக இம்முறை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை ஒலித்தது. இந்நிலையில் இப்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த உத்தரவு இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், அரசின் திட்டங்களை, செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்கினை அரசு உணர்த்திருப்பதாகவும் முதல்வர்விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in