மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும்.

அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய மூன்று முக்கிய ரயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது. இதன் மூலம் டெல்லி, மும்பை, அகமதாபாத் ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரேசன் அரசி திட்டத்தில், ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டித்துள்ளது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in