‘இன்கோவாக்’: ஜன.26 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

பாரத் பயோடெக் அறிவிப்பு
‘இன்கோவாக்’: ஜன.26 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாசி வழி கரோனா தடுப்பு மருந்தான ’இன்கோவாக்’ குடியரசு தினத்தன்று அறிமுகமாகிறது என்று பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின், கோவிஷீல்ட் உள்ளிட்ட உள்நாட்டு தயாரிப்பிலான கரோனா தடுப்பூசிகளின் வரிசையில், நாட்டின் முதல் நாசி வழி கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் தயாரித்த இந்த மருந்துக்கு, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி மாதம் இறுதியில் இன்கோவாக் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரான கிருஷ்ணா எல்லா, ‘இன்கோவாக் மருந்து குடியரசு தினமான ஜன.26 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது’ என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

நாசி வழி கரோனா தடுப்பு மருந்தினை, ஏற்கனவே கரோனா தடுப்பூசி டோஸ்கள் எடுத்துக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸாக பாவித்து எடுத்துக்கொள்ளலாம். இதுவரை கரோனா தடுப்பு மேற்கொள்ளாதவர்கள், இரண்டு டோஸ்களாக இன்கோவாக் எடுத்துக்கொள்ளலாம்.

இன்கோவாக் கரோனா தடுப்பு மருந்தினை டோஸ் ஒன்றுக்கு, அரசு தரப்பில் ரூ.325 மற்றும் தனியாரில் ரூ.800 என்ற விலைக்கு பெறலாம் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஜிஎஸ்டி வரிகள் தனி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in