நிறைவடையாத மழைநீர் வடிகால் பணி; பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் பலி: சென்னையில் சோகம்

நிறைவடையாத மழைநீர் வடிகால் பணி; பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் பலி: சென்னையில் சோகம்

சென்னையில் மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளம்பத்திரிகையாளர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் திட்டத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஈக்காட்டுத்தாங்கல் காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன்(24) இன்று தவறி விழுந்தார். பள்ளத்தில் இருநது கம்பிகள் குத்தி அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் சென்னை ராயப்பேட்டை மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். சென்னையில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in