பிரபல ஜவுளிக் கடைக்குச் சிக்கல்: மூன்றாவது நாளாகத் தொடரும் வருமான வரிச் சோதனை

பிரபல ஜவுளிக் கடைக்குச் சிக்கல்: மூன்றாவது நாளாகத் தொடரும் வருமான வரிச் சோதனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை காலங்களில் வரி ஏய்ப்பு செய்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் விழுப்புரம் பகுதியில் எம்.எல்.எஸ் குழுமத்திற்குச் சொந்தமான ஜவுளிக்கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். வரி ஏய்ப்பு உறுதி செய்யப்பட்ட காரணத்தினாலேயே சோதனைகள் தொடர்வதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

விழுப்புரத்தில்  பிரபல ஜவுளிக் கடையான கன்னிகா பரமேஸ்வரி ஜவுளிக்கடை மற்றும் கிரீன்ஸ் வணிக வளாகம், எம்.எல்.எஸ் ஜவுளிக் கடை, எம்.எல்.எஸ் மளிகைக் கடை உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நீடிக்கிறது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.எஸ் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் பகுதியில் உள்ள சில ஜவுளிக் கடைகளிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in