அதிகாலையிலேயே ஆலையில் நுழைந்த ஐடி அதிகாரிகள்: 60 இடங்களில் அதிரடி சோதனை!

அதிகாலையிலேயே ஆலையில் நுழைந்த ஐடி அதிகாரிகள்: 60 இடங்களில் அதிரடி சோதனை!

ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் குழுமத்துக்குச் சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் காலணி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் ஃபரிதா பிரைம் டேனரி பிரைவேட் லிமிடெட் குழுமத்துக்குச் சொந்தமான ஆம்பூர், சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆம்பூரில் உள்ள தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை, புதுச்சேரியில் உள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 25க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஆம்பூர் பகுதியில் மிகப் பிரபலமான தொழிற்சாலையாக ஃபரிதா குழுமத்தின் தோல் மற்றும் காலணி தொழிற்சாலை 1976-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. செருப்பு மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் இந்த குழுமம், உலக அளவில் சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஃபரிதா குழுமத்தின் தலைவரான ரஃபீக் மக்கா கடந்த 2011-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். மேலும் அவர் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை சங்கங்களில் தலைவர் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்கப் பதவிகளை வகித்து வருகிறார். பத்ம ஸ்ரீ விருது பெற்ற தொழிலதிபருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in