4 வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை: சென்னையில் பல கோடி ரூபாய் பறிமுதல்?

சென்னையில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் வருமான வரித்துறை சோதனை4 வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை: சென்னையில் பல கோடி ரூபாய் பறிமுதல்?

சென்னையில் உள்ள நிறுவனங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. ஏற்கெனவே 7.5 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய  இடங்களில் பிப்.14-ம் தேதி  முதல் அதிரடியாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆதித்யா ராம், அம்பாலால், அசோகா நந்தவனம், ரேடியன்ஸ் ரியாலிட்டி, ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை அண்ணாநகர் 6 வது  அவென்யூவில் உள்ள அசோக் நந்தவன் நிறுவனத்திற்கு தொடர்பான இடங்களிலும், கிண்டி, நீலாங்கரை, நந்தனம் ஆகிய பகுதிகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி பகுதியில் உள்ள அசோகா ரெசிடென்சி நட்சத்திர ஹோட்டலிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு காலகட்டத்திற்கு பிறகு இந்த நான்கு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வீடு மற்றும் நில விற்பனையில் வருமானத்தை மறைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கணக்கில் வராத ரொக்க பணமும் இந்த நிறுவனங்கள் தொழிலில் கை மாறியதாகவும் கூறப்படுகிறது.இதில் குறிப்பாக பிரபல ஆதித்யா ராம் குழுமம் , சினிமா தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் தொடர்பான ஸ்டுடியோக்களில் பிரபலமான படங்கள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நான்கு பிரபலமான நிறுவனங்களிலும் தொடர்ந்து  நான்காவது நாளாக சோதனை நடைபெற்று வருவதாகவும் , கணக்கில் காட்டாத வருமானங்கள் மற்றும் வரி தொடர்பான ஆவணங்களை ஆதாரங்களைப்  பெற்று வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அம்பாலால் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ஜவுரி லால் ஜெயின் இல்லத்தில் 7.5 கிலோ தங்கம் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். இதேபோல பல்வேறு ஆவணங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in