இந்த மாதிரி ஸ்டேட்டஸ் வைத்தால் புகார் அளிக்கலாம்: அதிரடிக்கு தயாராகும் வாட்ஸ் அப் நிறுவனம்

இந்த மாதிரி ஸ்டேட்டஸ் வைத்தால் புகார் அளிக்கலாம்: அதிரடிக்கு தயாராகும் வாட்ஸ் அப் நிறுவனம்

வாட்ஸ் அப் செயலி மூலம் வன்முறையை தூண்டும் விதமாக ஸ்டேட்டஸ் வைத்தால் அது குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புகார் அளிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை பெரும்பான்மையானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வசதி பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தால் பயனாளிகள் அது குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புகார் அளிக்கும் புதிய வசதி வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

அத்துடன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் தனி நபரை தரக்குறைவாக விமர்சித்தல், பெண்களை அவதூறாக சித்தரித்தல் என ஈடுபட்டால் புகார் அளித்தலாம் என வாட்ஸ் அப் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. இவ்வாறான புகார்களை ஆய்வு செய்த பின், சம்பந்தப்பட்ட ஸ்டேட்டஸ் நீக்கப்படும் எனவும் மெட்டா தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் அனுப்பும் செய்திகள், படங்கள், காணொளிகள், உரையாடல்களின் பாதுகாப்பில் வாட்ஸ் அப் உட்பட எவரும் குறுக்கிட முடியாது எனவும் மெட்டா உறுதிப்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in