கூகுள் ஓனர் மனைவியுடன் தகாத உறவா?- எலான் மஸ்க் பரபரப்பு விளக்கம்

கூகுள் ஓனர் மனைவியுடன் தகாத உறவா?- எலான் மஸ்க் பரபரப்பு விளக்கம்

கூகுள் ஓனரின் மனைவியுடன் தனக்கு தகறான உறவு இருப்பதாக வெளியாகியுள்ள செய்திக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர், கடந்த ஆண்டு இறுதியில் தனது காதலியும் பிரபல பாடகியுமான கிரீம்ஸை பிரிவதாக அறிவித்தார். திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். காதலியை திடீரென எலான் மஸ்க் பிரிந்ததற்கு, தனது நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஷிவான் சில்ஸ் என்பவருடன் ஏற்பட்ட காதல்தான் என்று செய்தி வெளியானது. இதனை மஸ்க் மறுத்தார்.

காதலியுடன் எலான் மஸ்க்
காதலியுடன் எலான் மஸ்க்

இப்படி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் எலான் மஸ்க், தற்போது, கூகுள் மனைவியுடன் தவறான உறவு வைத்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது செயலுக்காக செர்ஜி பிரின்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், எலான் மஸ்க்கின் நண்பரும் கூகுள் இணை நிறுவனருமான செர்ஜி பிரின் கடந்தாண்டு இறுதியில் தனது மனைவி செர்ஜி பிரின்னை பிரிவதாக அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஜனவரியில் விவாகரத்து கோரினார்.

இந்த சர்ச்சை குறித்து கொந்தளிப்புடன் தற்போது விளக்கம் அளித்துள்ள எலான் மஸ்க், இந்த செய்தி அனைத்தும் முற்றிலும் தவறானது என்றும் முட்டாள்தனமானது என்றும் கூறியுள்ளார். நானும் செர்ஜி பிரினும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்துள்ள மஸ்க், அண்மையில் இரவில் நடந்த பார்ட்டி ஒன்றில் இரண்டு பேரும் ஒன்றாக கலந்து கொண்டோம் என்றும் 3 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே அவரை சந்தித்து இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in