மேற்கு வங்கத்தில் ஏழைகளின் பணம் ரூ.3,000 கோடியை திரும்பப் பெற்றுத்தருவோம்... பிரதமர் மோடி போன் பிரச்சாரம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் வேலை பெற்றுத் தருவதாக ஏழைகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடியை திரும்பப் பெற்றுத் தர பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

அமிர்தா ராய், மஹுவா மொய்த்ரா
அமிர்தா ராய், மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில், முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான அமிர்தா ராய் போட்டியிடுகிறார். இவரிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

அந்த உரையாடலின்போது பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அவர்களுக்குத் திருப்பித் தருவதை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளார்.

ஏழைகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், ஊழல்வாதிகளிடமிருந்து அமலாக்கத்துறை முடக்கிய சொத்துகள் மற்றும் பணம் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு திரும்பச் செல்வதை உறுதி செய்வதற்கான சட்ட வழிகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

வேலை பெற்றுத் தருவதற்காக அம்மாநிலத்தில் உள்ள மக்களிடமிருந்து லஞ்சமாக பெற்ற தொகையை ரூ.3 ஆயிரம் கோடியாக பிரதமர் மோடி மதிப்பிட்டுள்ளதாக அம்மாநில பாஜகவினர் தெரிவித்தனர்.

அமிர்தா ராயுடனான தொலைபேசி உரையாடலில், பிரதமர் மோடி மேலும் பேசுகையில், தனது இந்த நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிக்குமாறும், எதிர்க்கட்சிகளின் முன்னுரிமை நாடு அல்ல; அதிகாரம் மட்டுமே எனவும் கூறினார். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், தேவைப்பட்டால் சட்ட விதிகளை உருவாக்குவது உள்பட ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன் என பிரதமர் உறுதியளித்தார்.

ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் அளித்த ஆதரவை விமர்சித்த பிரதமர் மோடி, ”முன்பு கேஜ்ரிவாலுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் இப்போது அவருக்கு உதவுவதற்காக தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளனர்” என்றார்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், எம்பி-பதவியிலிருந்து நீக்கப்பட்ட, மஹுவா மொய்த்ரா போட்டியிடுகிறார். நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப தொழிலதிபர் தர்ஷன் நந்தானியிடம் ஆதாயங்கள் பெற்ற வழக்கில் சிபிஐ மஹுவா மொய்த்ரா வீட்டில் சமீபத்தில் சோதனை நடத்தியது.


இந்நிலையில் அந்நிய செலாவணி முறைகேடு தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு, மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மனை இன்று அனுப்பியது. இந்நிலையில் அவரது தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடி மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in