சென்னையில் கடந்த மூன்று வாரத்தில் 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது !

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது !
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது !சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது !

சென்னையில் கடந்த மூன்று வாரத்தில் மட்டும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுப்பட்ட 45 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’கடந்த 01.01.2023 முதல் 18.02.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 19 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 16 குற்றவாளிகள், சைபர் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 9 குற்றவாளிகள் என மொத்தம் 45 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in