நீடாமங்கலத்தில் 10 சென்டிமீட்டர் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்நீடாமங்கலத்தில் 10 சென்டிமீட்டர் மழை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 24 மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பெய்து வடகிழக்கு பருவமழை காலத்தை  மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன் டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 10 சென்டிமீட்டர் மழை பெய்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும்  சராசரி மழையை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் திருவாரூர், நன்னிலம் ஆகிய ஊர்களிலும், நாகப்பட்டினம் மாவட்டம்  வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும்.  தலா 9  சென்டிமீட்டர்  மழை பதிவாகியுள்ளது.  நாகை மாவட்டம்  திருப்பூண்டியில்  8 செ.மீ, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி,  குடவாசல் ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை 3 செ.மீ,  செம்பனார்கோயில் 5 செ.மீ, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. கொள்ளிடம் 1 செ.மீ மழை பெய்துள்ளது. 

டெல்டா மாவட்டங்களில்  வானம் மேகமூட்டத்துடன் இருட்டிக்கொண்டு காணப்படுவதுடன், தொடர்ந்து  கனமழையும் பெய்து வருவதன் காரணமாக அக்டோபர்  மாதம் பெய்யும் அடை மழை காலத்தை இந்த பிப்ரவரி மாதம்  நினைவுபடுத்திக் கொண்டுள்ளது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுப முகூர்த்த தினமான இன்று திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் இன்னலுக்கு  உள்ளாகியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in