
சென்னையில் மருந்தக ஊழியரின் கணக்கில் 753 கோடி ரூபாயை வங்கி டெபாசிட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது இத்ரீஸ்(30). இவர் சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் 10 ஆண்டுகளாக தங்கி அதே பகுதியில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார். மாதம் 15 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் முகமதுக்கு இன்று காலை அதிர்ச்சி காத்திருந்தது. இன்று காலை முகமது இத்ரீஸ் வைத்துள்ள கோடக் மஹிந்திரா வங்கிக் கணக்கிற்கு 753 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முகமது உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்பு கொண்டு கேட்டார். அவரிடம் விவரங்களைப் பெற்றுக்கொண்ட வங்கி ஊழியர்கள் பணம் டெபாசிட் செய்யப்பட்டது குறித்து முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் சில மணி நேரத்தில் முகமதின் வங்கிக் கணக்கை சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் முடக்கி உள்ளனர். வெறும் 3000 ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கில் வைத்திருந்த ஊழியர் முகமதிற்கு 753 கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்தே போனார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முகமது இத்ரீஸ், " அண்ணாசாலையில் உள்ள கோடக் மகேந்திரா வங்கியில் எனக்கு கணக்கு உள்ளது. நேற்று 2000 ஆயிரம் ரூபாயை நண்பரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவிட்டு, இன்று காலை எதேச்சையாக பார்த்தேன். அப்போது 753 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் வந்ததாகவும், அதன் பின்னர் உடனடியாக தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. இது குறித்து முறையான விளக்கத்தை வங்கி அதிகாரிகள் மற்றும் தெரிவிக்காததால் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன்" என்றார்.
ஏற்கெனவே கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 9000 கோடி ரூபாய் டெபாசிட் செய்த விவகாரம் அடங்குவதற்குள் நேற்று தஞ்சாவூரில் கோடக் மகேந்திரா வங்கியில் இருந்து ஒருவரது வங்கிக் கணக்கில் 536 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் மீண்டும் மருந்தக ஊழியர் வங்கிக் கணக்கில் 753 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!