தமிழகத்தில் சற்று குறைந்தது கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2,671 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் சற்று குறைந்தது கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2,671 பேர் பாதிப்பு!

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று பாதிப்பு சற்றுக் குறைந்துள்ளது.

இந்தியாவில் இன்று புதிதாக 18,840 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்ந 24 மணி நேரத்தில் 16,104 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும் நாட்டில் 198.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில் இன்று பாதிப்பு சற்றுக் குறைந்துள்ளது. நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,722 ஆக இருந்த நிலையில் இன்று 2,671 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதில் ஆண்கள் 1,444 பேர், பெண்கள் 1,227 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 2,516 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில் கரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,842 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in