
கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கடுத்ததாக கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மற்ற இடங்களில் பெய்த மழையளவு விவரம், சிதம்பரம் 9 செ.மீ, கடலூர் 8 செ.மீ, வேளாங்கண்ணி, மற்றும் சீர்காழி 8 செ. மீ மழை பெய்துள்ளது. தரமணி, செம்பனார்கோயில், அண்ணாமலை நகர், தலைஞாயிறு, பொன்னேரி, காரைக்கால், திருப்பூண்டி, மகாபலிபுரம், வேதாரண்யம், மயிலாடுதுறை, சென்னை நுங்கம்பாக்கம், காட்டுக்குப்பம் அக்ரோ, வில்லிவாக்கம் ஏஆர்ஜி ஆகிய இடங்களில் ஏழு செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை விமான நிலையம், சோழவரம், நாகப்பட்டினம், திருக்குவளை, தண்டையார்பேட்டை, அம்பத்தூர், பூந்தமல்லி, நந்தனம், ஏசிஎஸ் கல்லூரி ஆகிய இடங்களில் ஆறு செ.மீ மழையும், ரெட் ஹில்ஸ், ஆவடி, பள்ளிக்கரணை, செங்கல்பட்டு உள்ளிட்ட மேலும் பல இடங்களில் ஐந்து சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இது தவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு சென்டிமீட்டர் முதல் நான்கு சென்டிமீட்டர் வரையிலும் மழை பொழிந்துள்ளது. இன்றும் தொடர்ந்து அதே அளவில் அதிக மழை பெய்து வருவதால் நாளை இன்றைய பதிவை விட இன்னும் கூடுதலாக மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வடகிழக்கு பருவ மழையின் வழக்கமான மழை அளவு தற்போது பதிவாகி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.