தமிழகத்தில் 28 சுங்கச் சாவடிகளில் அதிரடி கட்டண உயர்வு: கொந்தளிக்கும் வாகன ஓட்டிகள்

தமிழகத்தில் 28 சுங்கச் சாவடிகளில் அதிரடி கட்டண உயர்வு: கொந்தளிக்கும் வாகன ஓட்டிகள்

தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் 15 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்பட்டு அது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 53 சுங்கச்சாவடிகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு அதில் முதல் வகை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்தில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். இரண்டாவது வகை சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் முதல் வகை சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பரில் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது நேற்று நள்ளிரவு 12 மணி முதலே தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை, கொடைரோடு, சமயநல்லூர், மனவாசி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி நத்தக்கரை, ஓமலூர், தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி, புதூர், பாண்டியபுரம், சமயபுரம்-செங்குறிச்சி உட்பட 28 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், இதுவரை கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டுவந்தது. தற்போது, ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.100 ஆக வசூலிக்கப்படுகிறது. பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான ஒருவழி கட்டணம் 355 ரூபாயாகவும், பலமுறை பயணம் செய்ய 535 ரூபாயாகவும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த சுங்கச் சாவடிகள் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in