தென்னிந்தியாவில் அணைகளில் நீர்மட்டம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு!

கர்நாடகா மாநிலம், கிருஷ்ணராஜசாகர் அணை (கோப்பு படம்)
கர்நாடகா மாநிலம், கிருஷ்ணராஜசாகர் அணை (கோப்பு படம்)

தென்னிந்தியாவில் அணைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் மட்டம் சரிந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்தியாவின் தற்போதைய கோடைகாலம் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெப்பம் கடுமையாக நிலவி வருகிறது. வெப்ப அலை காரணமாக தினமும் பல்வேறு மாநிலங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. கோடைகாலம் வந்தாலே வறட்சியும், நீர் தட்டுப்பாடும் சேர்ந்தே வந்து விடுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் புள்ளி விவர தகவல்படி, தென்னிந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அணைகள், நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சி
வறட்சி

மத்திய நீர் ஆணையம் (சி.டபிள்யூ.சி.) நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, தென்னிந்தியா நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஏனெனில் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு வெறும் 17 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர் இருப்பு 29 சதவீதமாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் சராசரி நீர் இருப்பு 23 சதவீதமாகவும் இருந்தது.

தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 43 அணைகள் உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான 150 அணைகளில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர் இருப்பு 82 சதவீதமாக இருந்தது.

கோடை காலத்தால் வறண்டு வரும் நீர்த்தேக்கங்கள்
கோடை காலத்தால் வறண்டு வரும் நீர்த்தேக்கங்கள்

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த அணைகளில் 64.775 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) நீர் இருப்பு இருந்தது. இந்த ஆண்டு, இது கடந்த 25ம் தேதி நிலவரப்படி 53.775 பிசிஎம் ஆக உள்ளது.

கடந்த 10 ஆண்டு நேரடி நீர் சேமிப்பின் சராசரி 55.523 பிசிஎம் ஆகும். தென் இந்தியாவை தவிர, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவுடன் ஒப்பிடும்போது நேரடி சேமிப்புத் திறனில் அதிக பற்றாக்குறை உள்ளது. வரும் ஜூன் - செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது நீர் பற்றாக்குறை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in