`பணி நிரந்தரம் செய்யுங்கள்'- மருத்துவமனை மாடியில் ஏறி நின்று ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

மாடியில் ஏறி நின்று போராட்டம் நடத்தும் ஊழியர்கள்
மாடியில் ஏறி நின்று போராட்டம் நடத்தும் ஊழியர்கள்

புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  பணியாற்றும் ஊழியர்கள்  தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை மாடியில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான  ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் மாதம் 10,000 என்ற குறைவான  ஊதியத்தில் முதல்வர்  ரங்கசாமியால்  பணியமர்த்தப்பட்டவர்கள்.   கடந்த 11 ஆண்டுகளாக அதே ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் இவர்களுக்கு ஊதிய பாக்கியும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தங்கள் கோரிக்கைளை உடனடியாக  நிறைவேற்ற வலியுறுத்தி இன்று மருத்துவமனை கட்டிடத்தின் மேல் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு நின்று தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in