
சென்னையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 67.9 கிலோ கஞ்சா, 523 டைடல் வலி நிவாரண மாத்திரைகள், 3 கிராம் ஹெராயின், 4 கிராம் மெத்தம்பெடமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கையில் சென்னை பெருநகர போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சென்னை முக்கிய இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனச் சோதனை மற்றும் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னையில் மட்டும் கடந்த 7 நாட்களில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா உட்பட 67.9 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோல சென்னை திருவான்மியூரில் 523 டைடல் வலி நிவாரண மாத்திரைகள், 3 கிராம் ஹெராயின், 4 கிராம் மெத்தம்பெடமைன் உள்ளிட்ட போதை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக 17 வழக்குக்கள் பதிவுச் செய்யப்பட்டு 31 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.