கொலை,கொள்ளை நடக்காமலிருக்க கருப்பண்ண சாமிக்கு கிடா வெட்டு பூஜை நடத்திய போலீஸார்: விநோத வழிபாடு

கொலை,கொள்ளை நடக்காமலிருக்க கருப்பண்ண சாமிக்கு கிடா வெட்டு பூஜை நடத்திய போலீஸார்: விநோத வழிபாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் இந்த ஆண்டில் குறைய வேண்டி கருப்பணசுவாமி கோயிலுக்கு வடமதுரை போலீசார் கிடா வெட்டி வேண்டி கொண்டனர்.

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி சுப தினங்கள் வருவதுண்டு. இருந்தபோதிலும், கோயில் திருவிழாக்கள், குல தெய்வ வழிபாட்டின்போது நம் அபிலாஷைகள் நிறைவேற வேண்டும் என ஒவ்வொருவரின் நம் இஷ்ட, குல தெய்வங்கள் முன் மனதார வேண்டிக்கொள்வதுண்டு. ஆசை நிறைவேறியதும், கோயிலுக்கு சென்று முடி காணிக்கை, கிடா வெட்டு, பொங்கல் என நேர்த்திக் கடன் செலுத்துகிறோம். ஆனால், இங்கு ஒரு விநோத வேண்டுதலுக்காக கிடா வெட்டி, பொங்கல் வைத்து சுவாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம்  வடமதுரை போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து வந்தவாறு  உள்ளன. போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டும் கூட திருட்டு, வழிப்பறி,கொலை, கொள்ளையை  தடுக்க இயலாமல் பரிதவித்து வந்தனர். இதற்கு இங்குள்ள வண்டி கருப்பணசுவாமிக்கு கிடா வெட்டாதது சாமி குத்தமாக இருக்கும் என போலீசார் சிலர் ஆரூடம் கூறி வந்தனர். இதைதொடர்ந்து, இந்தாண்டிலாவது கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைய வேண்டி, வண்டி கருப்பணசுவாமி கோயிலில் வடமதுரை போலீசார் கிடா வெட்டு நடத்தி பொங்கலிட்டு வழிபட்டனர். சுவாமியை வேண்டிக்கொண்ட போலீசார்,  பொதுமக்களுக்கு கறி விருந்து அளித்தனர்.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in