சென்னையில் அடுத்தடுத்து சிக்கியது ஹெராயின்: சாலையில் சுற்றித்திரிந்தவர்கள் கைது

சென்னையில் அடுத்தடுத்து சிக்கியது ஹெராயின்: சாலையில் சுற்றித்திரிந்தவர்கள் கைது

சென்னை சைதாப்பேட்டையில் 3 கிராம் ஹெராயின் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 1.4 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். வட மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்தனர்.

சென்னையில் போதை பொருட்களின் பயன்பாடு அதிக அளவில் உள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் சென்னை பெருநகர காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். அவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது 3 கிராம் ஹெராயின் வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல நுங்கம்பாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரை போலீஸார் சோதனை செய்தது 1.4 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடித்தனர். இதனை அடுத்து ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த நிஜாம்கான், சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்திரேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in