ரூ.3.32 கோடி மதிப்பிலான 6.8 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்; ஒருவர் கைது

தங்கக்கட்டிகள் பறிமுதல்
தங்கக்கட்டிகள் பறிமுதல்ரூ.3.32 கோடி மதிப்பிலான 6.8 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்; ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியிடம் ரூ.3.32 கோடி மதிப்பிலான 6.8 கிலோ 24 கேரட் சுத்த தங்கத்தை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணி ஒருவரை கைது செய்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஆண் பயணி ஒருவர் தனது கைப்பையில் 68 தங்கக்கட்டிகளை சட்ட விரோதமாக கொண்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரூ.3.32 கோடி மதிப்பிலான 6.8 கிலோ 24 கேரட் சுத்தத் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தல் தங்கத்தைக் கொண்டு வந்த பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in