5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு  முக்கிய அறிவிப்பு

அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6 முதல் 8-ம் தேதி வரை ஒன்றிய அளவில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

எனவே, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அக்டோபர் 6 முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வர வேண்டும். இதை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in