மருத்துவம் படிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நீட் தேர்விற்கு நாளை ஹால் டிக்கெட்

மருத்துவம் படிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நீட் தேர்விற்கு நாளை ஹால் டிக்கெட்

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜூலை 12) வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வருகிற 17-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மே மாதம் 20-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீட் தேர்வுக்கு 10 லட்சத்து 64 ஆயிரத்து 606 பெண்கள், 8 லட்சத்து 7 ஆயிரத்து 711 ஆண்கள், 12 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் எழுதுகிறார்கள். இந்த நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், நாளை (ஜூலை 12) காலை 11.30 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வர்கள் https://neet.nta.nic.in இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in