ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கியச் செய்தி: ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்

ஓய்வூதியம்  பெறுபவர்களுக்கு முக்கியச் செய்தி: ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்

ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழ் என்ற ஜீவன் பிரமான் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.. கரோனா பரவல் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்று (செப்.30) கடைசி நாளாகும். இதை சமர்ப்பிக்காவிட்டால் ஓய்வூதியம் கிடைக்காது. எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம். இந்திய அஞ்சல் துறை வங்கி (IPPB) சேவை மூலம் சமர்ப்பிக்கலாம். இ-சேவை மையம் (e-seva centre) மற்றும் பொது சேவை மையங்கள் வழியாக சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in