
'சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு நியாயம் சேர்க்கவில்லை' என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.
அதிகாரபூர்வமற்ற திவால் நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகிறது பாகிஸ்தான் தேசம். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பாக். எதிர்பார்த்த பலாபலன்கள் கிடைத்தபாடில்லை. நிதி உதவிக்காக வழங்கலுக்காக ஐஎம்எஃப் விதிக்கும் நிபந்தனைகளை, பாகிஸ்தானில் நிறைவேற்றில் மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாவார்கள். இதனால் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சி வெடிக்கவும் சாத்தியமாகக் கூடும் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது.
இதற்கிடையே ’ஐஎம்எஃப் அமைப்பு பாகிஸ்தானுக்கு நியாயம் சேர்க்கவில்லை’ என பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ வருத்தம் தெரிவித்துள்ளார். ’இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் பாகிஸ்தான் தேசத்துக்கு ஐஎம்எஃப் உதவ வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.