ஐஎம்எஃப் பெண் தலைவரின் க்யூட்டான ஆட்டம்... அதற்குள் 2 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்த வீடியோ!

நடனமாடிய ஐஎம்எஃப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா
நடனமாடிய ஐஎம்எஃப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா

டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா நடனமாடிய வீடியோவை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிர்ந்துள்ளார்.

கிறிஸ்டலினா ஜார்ஜீவா
கிறிஸ்டலினா ஜார்ஜீவா

டெல்லியில் இன்றும், நாளையும் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகத்தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

இன்று மாநாட்டிற்கு அரங்கிற்கு வருகை தந்த அவர்களை பாரம்பரிய இந்திய இசை நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைப் பார்த்து மாநாட்டிற்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் (ஐஎம்எஃப்) கிறிஸ்டலினா ஜார்ஜீவா, இசைக்குத் தகுந்தவாறு நடன அசைவுகளை செய்தார். இது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில்(X) மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. குறுகிய நேரத்தில் 2 லட்சம் பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்றுள்ளது. அதில், "எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் ஜார்ஜீவாவிற்குள் இருக்கும் குழந்தைத்தன்மை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது" என்று ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in