அச்சுறுத்தும் வெப்ப அலை... இந்த வருடத்தில் இதுவரையில்லாத வெப்பநிலை; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை
இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை

வெப்ப அலை அதிகரித்து வருவதன் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெப்பநிலை உச்சம் தொடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் எதிர்பாராத சவாலாக வெப்ப அலை எழுந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக வந்தவர்களில் கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பல வாக்காளர்கள் சுருண்டு விழுந்து இறந்துள்ளனர். வாக்கு சதவீதத்தை பாதிக்கும் வகையில் வெப்ப அலை அதிகரித்துள்ளது. பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட பல வேட்பாளர்கள் மயக்கமடைந்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

இதையொட்டி நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த 2024-ம் ஆண்டு இதுவரை பதிவு செய்யப்படாத வெப்பநிலையை தொடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த வகையில் நடப்பாண்டின் அதிகபட்ச வெப்பநிலை 2023-ன் சாதனையை முறியடிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து நாட்களில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேந்திரபாரா, கட்டாக் மற்றும் போலங்கிர் நகரங்களில் அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் பதிவானதாக புவனேஸ்வரில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த நான்கு நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 புள்ளிகள் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்ப அலை அச்சுறுத்தல்
வெப்ப அலை அச்சுறுத்தல்

மேற்கு வங்காளத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையான வானிலை, வறண்ட காற்று காரணமாக மாநில அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை மாற்றியமைத்துள்ளது. அவசியமெனில் ஆன்லைன் வகுப்புகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே காலை 11 மணி முதல் மாலை 4 இடையே வெளியில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in