சட்டவிரோதமாக காட்டுப்பன்றிக்கு அமைக்கப்பட்ட மின்வேலி: தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயிக்கு நேர்ந்த பரிதாபம்

சட்டவிரோதமாக காட்டுப்பன்றிக்கு அமைக்கப்பட்ட மின்வேலி: தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயிக்கு நேர்ந்த பரிதாபம்

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே சட்டவிரோதமாக போடபட்ட மின்வேலியில் சிக்கி தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் கிராமத்தை சேர்ந்வர் விவசாயி கஜேந்திரன் (42 ). இன்று காலை 5 மணி அளவில் கீழக்கலங்கல் ஊருக்கு வெளிப்புறம் உள்ள அவரது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். காலை 9 மணி ஆகியும் வீடு திரும்பாததால், அவரைத் தேடி அவர் மனைவி இளங்காமணி தோட்டத்திற்கு வந்தார்.

அப்போது பக்கத்து விவசாய தோட்டம் வைத்திருக்கும் நவநீதகிருஷ்ணபுரம் பெருமாள் என்பவரது தோட்டத்தில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் தண்ணீர் பாய்ச்சும் போது மண்வெட்டி பட்டு உரசியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் கஜேந்திரன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விவசாயி மின்வேலியில் அடிப்பட்டு இறந்த தகவல் அறிந்த பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். இறந்தவருக்கு உரிய நிவாரணம் மற்றும் வீட்டில் உள்ளவருக்கு அரசு வேலை போன்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். சம்பவ இடத்திற்கு தென்காசி கோட்டாட்சியர் கங்கா தேவி, ஆலங்குளம் டி.எஸ்.பி சகாய ஜோஸ், தென்காசி எம்.எல்.ஏ பழனிநாடார் ஆகியோர் வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இறந்தவருக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கவும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன்பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த பெருமாள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in