கடத்திச் செல்லப்பட்ட ஆவின் பால்; நள்ளிரவில் சோதனையில் அதிகாரிகள் அதிரடி: திருநெல்வேலியில் 4 பேர் சிக்கினர்

கடத்திச் செல்லப்பட்ட ஆவின் பால்; நள்ளிரவில் சோதனையில் அதிகாரிகள் அதிரடி: திருநெல்வேலியில் 4 பேர் சிக்கினர்

நெல்லை மாவட்ட ஆவினில் நிர்ணயிக்கப்பட்ட அளவினை விடக் கூடுதலாக முறைகேடாக பால் பாக்கெட்களை கடத்திச் சென்ற ஆவின் ஊழியர்கள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மண்டல ஆவின் நிறுவனம் நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ளது. இங்கு இருந்து ஆவின் பாலானது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றது. நாள் ஒன்றுக்கு 70 ஆயிரத்திற்கும் அதிகமான லிட்டர்களில் பால் இங்கு இருந்து வெளியே செல்லும். இந்த நிலையில், இந்த ஆவின் நிறுவனத்தில் இருந்து அனுமதி பெறப்பட்ட அளவைவிட அதிக எண்ணிக்கையில் ஆவின் பால் பாக்கெட்கள் கடத்திச் செல்லப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் ஆவின் கூடுதல் துணை மேலாளர் ஜோஸ்பினா தெற்கு பஜார் பகுதியை நோக்கிச் சென்ற ஆவின் பால் வண்டியை நேற்று நள்ளிரவு தடுத்து நிறுத்திச் சோதனை செய்தார். அப்போது அதில் முறையான அனுமதி பெறப்பட்ட பால் பாக்கெட்களை விட 209 லிட்டர் பால் பாக்கெட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. ஆனால் அவற்றை முறைகேடாக, அரசு ஆவின் குறிப்புகளின் ஆவணங்களில் இல்லாமலேயே கொண்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ஆவின் கூடுதல் துணை மேலாளர் ஜோஸ்பினா, இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டார். காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.

அதில், முறைகேட்டில் ஈடுபட்ட லோடுமேன் மன்சூர், கணக்குப்பதிவாளர் ஆசைதம்பி, பால்முகவர் ரமேஷ், உதவியாளர் அருண் ஆகிய நான்கு பேரையும் பெருமாள்புரம் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து ஆவின் நிர்வாகம் இந்தக் குற்றச்சம்பவத்திற்கு ஆவின் நிறுவனத்தில் இருக்கும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in