சீறிப் பாய்ந்த கார்கள்... தூசு கிளப்பிய பைக்குள்... மலைப்பாதையில் சட்டவிரோதமாக நடந்த மோட்டார் ரேஸ் பந்தயம்! அதிர்ந்த அதிகாரிகள்!

அனந்தகிரியில் நடந்த பைக் ரேஸ்.
அனந்தகிரியில் நடந்த பைக் ரேஸ்.
Updated on
1 min read

அனந்தகிரி மலையில் சட்டவிரோதமாக நடைப்பெற்ற பைக், கார் பந்தயத்தில் ஈடுட்டவர்கள் குறித்து வனத்துறை, விஜிலென்ஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனந்தகிரியில் நடந்த கார் ரேஸ்
அனந்தகிரியில் நடந்த கார் ரேஸ்

சுதந்திரத் தினத்தைக் கொண்டாடும் வகையில் தெலங்கானாவில் உள்ள ஐதராபாத்தில், பிகாராபாத் மாவட்டத்தில் உள்ள அனந்தகிரி மலையில் சில இளைஞர்கள் சட்டவிரோதமாக கார் மற்றும் பைக் பந்தயத்தை நடத்தி உள்ளனர்.

சுதந்திர தினப் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்த நிலையில், வனப்பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்தப் போட்டி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்த காட்சிகளின் அடிப்படையில், வாகனங்களின் பதிவு எண்களை சேகரித்த போலீஸாரின் விசாரணையில், ரேஸில் ஈடுபட்டவர்கள் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும், பந்தயத்திற்கு அனுமதி பெறவில்லை என விகாராபாத் போலீஸார் தெரிவித்தனர். அத்துடன் வழக்குப் பதிவு செய்து, வாகன உரிமையாளர்களின் விவரங்களைக் கண்டறிய போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இதே போல், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரித்தனர்.

வனத்துறை அதிகாரி ஞானேஸ்வர் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரி ராஜா ரமண ரெட்டி ஆகியோர் கூறுகையில், " இந்த போட்டிக்காக இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளனர். சுதந்திரத் தினத்தன்று அனந்தகிரி மலைக்கு வந்த இளைஞர்கள், அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வழிபாடு செய்துள்ளனர். இதன் பின்னர் கார், பைக் பந்தயங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் விவரங்களைச் சேகரித்து விசாரித்து அறிக்கையை போலீஸாரிடம் சமர்ப்பிப்போம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" என்றனர்.

வனப்பகுதியில் சைரன் பொருத்தப்பட்ட வாகனங்களில் விதிகளை மீறி பந்தயம் நடத்தப்பட்டுள்ளதுடன், வனவிலங்குகளுக்கும் இடையூறு செய்துள்ளனர் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in