உள்ளாட்சிகளில் பேரூராட்சி வராது: அதிகாரிகள் பதிலால் ஷாக்கானவர் பாசனசபைத் தேர்தல் புறக்கணிப்பு!

 குளம்
குளம் உள்ளாட்சிகளில் பேரூராட்சி வராது: அதிகாரிகள் பதிலால் ஷாக்கானவர் பாசனசபைத் தேர்தல் புறக்கணிப்பு!

பாசன சபை எனப்படும் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை நடக்கிறது. ஆனால் இதில் முறைகேடுகள் நடப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலேயே நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் வேட்பு மனு கடந்த 11-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை நடந்தது. வேட்புமனுக்களின் பரிசீலனை முடிந்து நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இதில் முறைகேடுகள் நடப்பதாக பூமி பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு தலைவர் பத்மதாஸ் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிக்கைவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து பத்மதாஸ் கூறுகையில், “உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருப்போர் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில் போட்டியிட முடியாது என்னும் விதி உள்ளது. முட்டம் கிளைக் கால்வாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் தேர்தலுக்கு நான் விண்ணப்பித்து உள்ளேன். என் மனுவும் ஏற்கப்பட்டது. ஆனால் இதேபதவிக்கு பேரூராட்சித் தலைவர் ஒருவரும் விண்ணப்பித்துள்ளார். அவர் மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் இருப்போர் இந்தப் பதவிகளுக்கு போட்டியிட முடியாது என்னும் விதி உள்ளது. ஆனால் அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தவில்லை. உள்ளாட்சி என்றால் ஊராட்சி மட்டும் தான். பேரூராட்சி வராது எனப் புதுவிளக்கம் தருகின்றனர். இதன் காரணமாக நான் தேர்தலைப் புறக்கணிக்கிறேன். அதேநேரம் நீதிமன்றம் வழியாக தேர்தல் முறைப்படி நடக்க நடவடிக்கை எடுக்கும் சட்டமுயற்சியைத் தொடங்கி உள்ளேன்” என்றார்.

நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் என்னும் இக்குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in