ஆதாரை இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுமா? மத்திய அமைச்சர் விளக்கம்

ஆதாரை இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுமா? மத்திய அமைச்சர் விளக்கம்

ஆதாரை இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர்களின் பெயர் நீக்கப்படுமா? என்ற கேள்வி மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய- மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசின் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று திடீரென அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஆதார் எண்ணை இணைக்காத பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் இணைக்காதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இது குறித்து மக்களவையில் நேற்று விளக்கம் அளித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது முற்றிலும் விருப்பத்தின் பேரிலானது. 54 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள் தங்கள் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்" என்று கூறியுள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு வாக்காளர்களை சற்று ஆறுதல் அடைய வைத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in