‘50 வழக்குகள் தீர்க்கப்பட்டால், கூடுதலாக 100 வழக்குகள் வருகின்றன’ - சட்டத் துறை அமைச்சர் தகவல்

‘50 வழக்குகள் தீர்க்கப்பட்டால், கூடுதலாக 100 வழக்குகள் வருகின்றன’ - சட்டத் துறை அமைச்சர் தகவல்

இந்தியாவின் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்குகின்றன. இந்நிலையில், “ஒரு நீதிபதி 50 வழக்குகளுக்குத் தீர்ப்பளிக்கிறார் என்றால், அதன் பின்னர் புதிதாக 100 வழக்குகள் வருகின்றன” என மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருக்கிறார்.

மழைக்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கிரண் ரிஜிஜு, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 4.83 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்திருந்தார். இவற்றில் 4 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் 72,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று (ஆக.20) நடந்த அயுதப் படைகள் தீர்ப்பாயம் தொடர்பான கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்றார். கருத்தரங்கில் உரையாற்றிய கிரண் ரிஜிஜு, “ஒரு நீதிபதி 50 வழக்குகளுக்குத் தீர்ப்பளித்த பின்னர் புதிதாக 100 வழக்குகள் வருகின்றன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், அவர்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறுகிறார்கள். இவ்விஷயத்தில் பிற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடக் கூடாது. ஏனென்றால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முற்றிலும் வேறானவை. சில நாடுகளின் மக்கள்தொகையே 5 கோடியைத் தாண்டாது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in