ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி பரிந்துரை

ஒலிம்பிக்கில்  கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி பரிந்துரை

அமெரிக்காவில் 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிஐ) பரிந்துரை செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டியைச் சேர்ப்பதற்கு ஒலிம்பிக் போட்டியின் அமைப்பு குழுவிடம் ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுமா என்பது குறித்து மும்பையில் அக்டோபர் மாதம் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in