டி20 உலக கோப்பை; கடைசி வரை போராடிய நெதர்லாந்து அணி: அடுத்த சுற்றில் வங்கதேசம் அணி!

டி20 உலக கோப்பை; கடைசி வரை போராடிய நெதர்லாந்து அணி: அடுத்த சுற்றில் வங்கதேசம் அணி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணியை 9 வித்தியாசத்தில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது வங்கதேச அணி.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இன்று குரூப் 2-ல் இடம் பெற்றிருந்த வங்கதேசம்- நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, தொடக்க வீரர்கள் சிறிது நேரம் கூட நிலைத்து நிற்கவில்லை. அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருந்த நிலையில் அந்த அணியில் அதிகபட்சமாக ஹுசைன் 38 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரரான விக்ரம்ஜித் சிங் டக் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் மறுமுனையில் காலின் அபாரமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராத வகையில் 62 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவர் தான் சந்தித்த 48 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசினார். இருந்தாலும் கடைசி வரை நெதர்லாந்து அணி வெற்றிக்காக போராடியது. நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in