பி.டி.ஆர் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால் உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன்: அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை
அண்ணாமலை பி.டி.ஆர் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால் உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன்: அண்ணாமலை பேச்சு

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் குறித்துப் பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அண்ணாமலை. இதை நிதி அமைச்சர் மறுத்து இருந்தார். இந்நிலையில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தால் உண்மையான ஆடியோவை வெளியிடுவதாக அண்ணாமலை பேசினார்.

சென்னை நடுக்குப்பத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில், மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், தமிழ் சாதனையாளர்கள் குறித்துப் பேசியவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார் அண்ணாமலை. அதன் பின்னர் அவர் அவ்விழாவில் பேசினார்.

அப்போது, “இன்று 100வது மனதின் குரல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி பேசினார். இதுவரை பேசிய 99 நிகழ்ச்சிகளிலும் தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் மிக முக்கிய இடம் கொடுத்து உள்ளார். 100வது நிகழ்ச்சியிலும் பிரதமர் தமிழக பழங்குடிகள் மற்றும் பெண்கள் குறித்துப் பேசி உள்ளார். எங்களின் நோக்கம், திமுகவுக்கு எதிரான மனநிலையை சிந்தாமல், சிதறாமல் வாக்குகளாக மாற்றுவதுதான். தமிழகத்தைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுகதான். ஆனால் கூட்டணியின் முகம் மோடிதான். ஊழலுக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டில் கடுகளவும் மாற்றம் கிடையாது.

அமைச்சர் பிடிஆர் ஆடியோ தொடர்பாக பதில் கூறியுள்ளார். பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டால் உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன்” என்று பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in