நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன்? - ராகுல் காந்தியின் பளிச் பதில்

நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன்? - ராகுல் காந்தியின் பளிச் பதில்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையின் போது தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு விளையாட்டாக பதிலளித்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு 'கர்லி டேல்ஸு'க்கு அளித்த பேட்டியில், 52 வயதான காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனது திருமணம் குறித்த "சரிபார்ப்புப் பட்டியலை" வெளிப்படுத்தினார். அந்த நேர்காணலின் போது, "விரைவில் எந்த நேரத்திலும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளீர்களா?இல்லையா? என்ற நிகழ்ச்சி நெறியாளரின் கேள்விக்கு, "சரியான பெண் வந்தால், நான் திருமணம் செய்துகொள்வேன்." என்று ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம் "செக்லிஸ்ட்" ஏதும் உள்ளதா என்று கேட்டதற்கு, அவர் 'இல்லை, ஒரு அன்பான நபர், புத்திசாலி' என்று பதிலளித்தார். உடனே நேர்காணல் செய்பவர், "பெண்கள் இதன் மூலம் செய்தியைப் பெறுகிறார்கள்" என்று கிண்டல் செய்தபோது, ​​"சரி, நீங்கள் இப்போது என்னை சிக்கலில் மாட்டி விடுகிறீர்கள்" என விளையாட்டாக கூறினார். இந்த வீடியோவை அக்கட்சியின் தலைவர்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக, டிசம்பர் மாதம் ராகுல் காந்தி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தாயார் சோனியா காந்தி மற்றும் தனது பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் பண்புகளை, தனக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர் கொண்டிருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in