ஹர்திக் பாண்ட்யா ஒரு நல்ல கேப்டனாக இருப்பார்: குமார் சங்கக்காரா நம்பிக்கை!

ஹர்திக் பாண்ட்யா ஒரு நல்ல கேப்டனாக இருப்பார்: குமார் சங்கக்காரா நம்பிக்கை!

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இலங்கை டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா, "ஹர்திக் ஒரு நல்ல கேப்டனாக இருப்பதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்

குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் சீசனில் ஐபிஎல் கோப்பையை ஹர்திக் பாண்டியா தலைமையில் வென்றது. இந்த நிலையில் அவர் இலங்கை டி20 போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, அந்த அணிகளுக்கு எதிராக வெற்றியும் கண்டார். இதனால், வரவிருக்கும் இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளில் அவர் இந்தியாவை சிறப்பாக வழிநடத்துவார் என்று நம்பப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய குமார் சங்கங்காரா, “ஹர்திக் பாண்ட்யாவின் தலைமை சிறப்பானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதை நாம் அனைவரும் ஐபிஎல்லில் பார்த்தோம். இப்போது அவர் சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஒரு கேப்டனாக இருப்பதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. இப்போது களத்தில் கேப்டன்சி வேறு விஷயமாக உள்ளது. நேரத்திற்கேற்ப சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கான வியூகம் வகுக்க வேண்டும். கூர்மையாக செயல்பட வேண்டும். ஒரு இலக்குடன் விளையாடுவதற்கு அணியில் தனது வீரர்களை ஊக்குவிப்பது, பேசுவது மற்றும் நிர்வகிப்பது மிகவும் கடினமான பகுதியாகும். அதனை அவர் சிறப்பாக செய்யவேண்டும் ”என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in