விரும்பிய காதலி விலகிச் சென்றதால் கொலை செய்தேன்: ரயிலில் தள்ளி மாணவியைக் கொன்றவர் பரபரப்பு வாக்குமூலம்

விரும்பிய காதலி விலகிச் சென்றதால் கொலை செய்தேன்: ரயிலில் தள்ளி மாணவியைக் கொன்றவர் பரபரப்பு வாக்குமூலம்

தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தேன் என்று கைது செய்யப்பட்ட வாலிபர் சதீஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம் (47). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வரலட்சுமி (43) என்ற மனைவியும், சத்யா (20) என்ற மகளும் இருந்தனர். இவரது மகள் சத்யா தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13- ம் தேதி கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சதீஷ்(23) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சதீஷ் அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சதீஷ் அளித்த வாக்குமூலத்தில், " சத்யாவை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். ஆனால், அவரது பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முயன்றனர். சத்யாவின் தாய் கூறியதால் தான் அவர் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் மனம் உடைந்து போனேன். நாள்தோறும் சத்யாவைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து அவரைத் தொடர்ந்து சென்றேன். ஆனால், சத்யாவை கொல்ல மனமில்லாமல் 10 நாட்களாக அவரை பின்தொடர்ந்தும் திரும்பி வந்து விட்டேன். இறுதியாக சத்யாவை ரயில் முன் தள்ளிக் கொலை செய்தேன்" என்று கூறியுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in