எனக்கு வாழ விருப்பமில்லை: கடிதம் எழுதி வைத்து விட்டு வளர்ப்பு நாயுடன் தூக்கில் தொங்கிய டெய்லர்

எனக்கு வாழ விருப்பமில்லை: கடிதம் எழுதி வைத்து விட்டு வளர்ப்பு நாயுடன் தூக்கில் தொங்கிய டெய்லர்

மனைவி இறந்ததால், வாழ விருப்பமில்லை எனக் கடிதம் எழுதி வைத்து தான் வளர்ந்து வந்த நாயுடன் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசவபாளையம் சின்ன சாயக்காரத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். பட்டு சேலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டின் முதல் மாடியில் இரண்டு ஆண்டுகளாக ராஜ்(50) என்ற டெய்லர்குடியிருந்து வந்தார். வீட்டின் உரிமையாளரான பாஸ்கர் நேற்று ராஜ் வீட்டிற்கு வாடகை வாங்க வந்துள்ளார். அப்போது ராஜ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பாஸ்கர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி போலீஸார், ராஜ் வீட்டின் கதவைத் திறந்து சென்ற பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் சுவற்றில் சென்னையில் இருக்கும் மனைவி இறந்து விட்டாள். இனி மேல் எனக்கு வாழ விருப்பமில்லை என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அத்துடன் தான் வளர்ந்து வந்த நாயுடன் ராஜ் தூக்கிட்டு இறந்து கிடந்தார். அவர் இறந்து நான்கு நாட்களானதால் ராஜ் உடல் அழுகியிருந்தது. இதையடுத்து ராஜ் மற்றும் நாயின் உடலை மீட்டனர். ராஜின் உடலை பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்ப்பு நாயுடன், டெய்லர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in