'எனக்கு இரண்டு கைகளும் இல்லை; கல் வீசினேன் என்கிறார்கள்!'

பாஜகவினரால் வாலிபருக்கு நடந்த கொடுமை
'எனக்கு இரண்டு கைகளும் இல்லை; கல் வீசினேன் என்கிறார்கள்!'

மத்திய பிரதேசம் மாநிலம், கார்கோன் பகுதியில் ஏப்ரல் 10-ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இந்த பகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அனுமன் ஜெயந்தி ஊர்வலம் சென்ற போது அதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் மதக்கலவரமானது.

இதையடுத்து முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இடிக்கப்படும் வீடுகள்.
இடிக்கப்படும் வீடுகள்.

இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் கார்கோனில் உள்ள முஸ்லிம் வீடுகள் மற்றும் கடைகள் புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளப்பட்டன. இப்படி இடிக்கப்பட்டதில் வாசிம் ஷேக் என்பவரின் கடையும் ஒன்று. ராமநவமி ஊர்வலத்தில் கல்வீசியதாக இவரது கடை இடிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2005-ம் ஆண்டு நடைபெற்ற மின்சார விபத்தில் தனது இரண்டு கைகளையும் வாசிம் ஷேக் இழந்துள்ளார். "இரண்டு கைகளும் இல்லாத நான் எப்படி கல்வீச முடியும்?" என்று கண் கலங்க கேட்டுள்ளார் வாசிம் ஷேக். கடந்த 12 ஆண்டுகளாக இந்த கடை மூலம் தனது குழந்தைகளையும், பெற்றோரையும் பாதுகாத்து வந்த வாசிம் ஷேக், தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார். ரம்ஜான் பண்டிகை வர உள்ள சூழலில் பாஜக திட்டமிட்டு இந்த பகுதியில் வன்முறையைக் கட்டவிழ்த்து முஸ்லிம் மக்களின் வீடு, கடைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் தள்ளியுள்ளது என்ற குரல்கள் கார்கோனில் கேட்கிறது. அதில் வாசிம் ஷேக்கின் குரலும் இணைந்திருக்கிறது.

Related Stories

No stories found.