அரசு வேலை கிடைக்கவில்லை, தற்கொலை செய்துகொள்கிறேன்: வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ஆற்றில் குதித்த வாலிபர்

அரசு வேலை கிடைக்கவில்லை, தற்கொலை செய்துகொள்கிறேன்: வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ஆற்றில் குதித்த வாலிபர்

அரசு வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்வதாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு வாலிபர் யமுனை ஆற்றில் குதித்தார். அவரைத்தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் நக்லா தல்ஃபி பகுதியைச் சேர்ந்தவர் கர்மவீர் சிங் பவுனியா(35). இவர் கடந்த சில ஆண்டுகளாக அரசு வேலையில் சேர முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் ராணுவத்தில் சேர்வதற்கும் அவர் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஏற்பட்ட மனஉளைச்சலில் கர்மவீர் சிங் பவுனியா தற்கொலை செய்து கொள்கிறேன் என்று தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸ் நேற்று வைத்துள்ளார். இதைப் பார்த்த அவரது குடும்பத்தார், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் அவரைத் தேடினர். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர். போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் கர்மவீர் சிங்கின் செல்போன் மற்றும் செருப்பு ஆகியவை ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் கிடந்தது. இதையடுத்து அவர் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து கர்மவீரின் உடலைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in