`கல்லூரி செல்லும் வரை மின்சாரத்தை பார்த்தது இல்லை’- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உருக்கம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி`கல்லூரி செல்லும் வரை மின்சாரத்தை பார்த்தது இல்லை’- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

’ தான் பிறக்கும் போதே வெள்ளி ஸ்பூனுடன் பிறக்கவில்லை. பல தோல்விகளை சந்தித்து தான் இந்த உயர்ந்த இடத்தை அடைந்தேன்’ என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ‘’ வாழ்க்கையில் பல தோல்விகள் வரத்தான் செய்யும். அதில் இருந்து மீண்டு வந்து நாம் வெற்றியடைய வேண்டும்.

நான் பிறக்கும் போதே வெள்ளி ஸ்பூனுடன் பிறக்கவில்லை. என்னுடைய கிராமத்தில் இருந்து தினமும் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்வேன். சரியான சாலை வசதி இருக்காது. கல்லூரி செல்லும் முன்வரை நான் மின்சாரத்தை பார்த்தது கிடையாது. அது நகரங்களில் மட்டுமே இருக்கும். மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் மட்டுமே படித்தேன். அப்போது எனக்கு ஒரே ஒரு குறிக்கோள் தான். நன்றாக படிக்க வேண்டும் முன்னேற வேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது.

பல தோல்விகளை சந்தித்தேன். அவை எனக்கு பல பாடங்களை சொல்லிக் கொடுத்தது. அதில் இருந்து கற்றப்பாடத்தை கொண்டு இன்றைக்கு இந்த உயர்ந்த இடத்தில் நிற்கிறேன். தோல்விகளை கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள். நமது நாடு சாதனையாளர்களை ஊக்குவிக்கிறது. பலரும் முன்னேறி வருகிறார்கள். எல்லோருக்கும் எடுத்துக்காட்டான வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in