அடேங்கப்பா... பாஜக பெண் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.221 கோடி!

மாதவி லதா
மாதவி லதா

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் மாதவி லதாவின் சொத்து மதிப்பு ரூ.221.38 கோடி என பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம், செகாந்திரபாத்தில் வசிக்கும் 49 வயதான மாதவி லதா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் அவரை எதிர்த்து அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசதுத்தீன் ஒவைசியும், காங்கிரஸ் சார்பில் முகமது வலியுல்லா சமீரும், பிஆர்எஸ் கட்சி சார்பில் ஸ்ரீனிவாஸ் யாதவும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். மே 13-ம் தேதி நடைபெற உள்ளது.

மசூதியை நோக்கி அம்பு எய்வது போல  சைகை செய்த மாதவி லதா
மசூதியை நோக்கி அம்பு எய்வது போல சைகை செய்த மாதவி லதா

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மசூதியை நோக்கி அம்பு எய்வது போன்று சைகை செய்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் செயலுக்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதன் காரணமாக அவர் மீது பேகம் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்பின் இந்த விவகாரம் தொடர்பாக மாதவி லதா மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில், வேட்புமனுவை மாதவி லதா நேற்று தாக்கல் செய்தார். அதில் சமர்பித்த பிரமாணப் பத்திரத்தில் பாஜக பெண் வேட்பாளர் மாதவி லதாவின் சொத்து மதிப்பு ரூ.221.38 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கணவர் கொம்பெல்லா விஸ்வநாத் ஐஐடி முன்னாள் மாணவராவார். மேலும் ஃபின்டெக் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். ரூ.165.46 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களையும், ரூ.55.91 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துக்களையும் மாதவி லதா வைத்துள்ளார்.

மாதவி லதா
மாதவி லதா

இவரது சொத்துக்களில் ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அடங்கும். மாதவி லதாவின் குடும்பம் 94.44 கோடி ரூபாய் மதிப்புள்ள விரிஞ்சி லிமிடெட் நிறுவனத்தின் 2.94 கோடி பங்குகளை வைத்துள்ளது.

இவரை எதிர்த்து போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி-யுமான அசதுத்தீன் ஒவைசிக்கு ரூ.23,8 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதவி லதா - அசதுத்தீன் ஓவைசி
மாதவி லதா - அசதுத்தீன் ஓவைசி

அதில் கடன் ரூ.7 கோடி இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவைசி லண்டனில் எல்எல்பி பட்டம் பெற்றவர். இவர் மீது ஐந்து கிரிமினல் வழக்குகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in