வேறு பெண்ணுடன் கணவர் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம்: அதிர்ச்சியில் 3 குழந்தைகளைக் கொன்று மனைவி தற்கொலை

வேறு பெண்ணுடன் கணவர் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம்: அதிர்ச்சியில் 3 குழந்தைகளைக் கொன்று மனைவி தற்கொலை

கணவர் வேறு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதால் ஏற்பட்ட பிரச்சினையால் தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஹலேபேடியைச் சேர்ந்தவர் அகில் அகமது. ராமநகர் மாவட்டத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவுசர்(30). இவர்களுக்கு ஹரீஸ் (7) என்ற மகனும், அலிஷா (4), அனம் பாத்திமா(2) என்ற மகன்களும் இருந்தனர்.

அகில் அகமது வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்தது அகில் அகமது மனைவிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அகில் அகமதுவின் செல்போனை, கவுசர் பார்த்த போது, அதில் அகில் அகமது, அந்த பெண்ணுடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுசர், இதுகுறித்து கணவரிடம் கேட்டுள்ளார். அத்துடன் அந்த பெண்ணுடன் உள்ள தொடர்பை விடும்படி வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் அவர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தனது மூன்று குழந்தைகளுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து கவுசர் கொலை செய்துள்ளார். அத்துடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீட்டிற்கு வந்த அகில் அகமது தனது மனைவியும் மூன்று குழந்தைகளும் இறந்து கிடப்பதைப் பார்த்து அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி, நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அகில் முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in